பிகில் படத்தில் ஷாருக் : லேட்டஸ்ட் அப்டேட்

பிகில் படத்தில் விஜய் இரட்டைவேடத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிகில் படத்தில் ஷாருக் : லேட்டஸ்ட் அப்டேட்

பிகில் படம் தான் ஷாருக்கானுக்கான முதல் தமிழ் படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (Courtesy: L iamsrk R actorvijay )

ஹைலைட்ஸ்

  • ஷாருக்கான் இதுவரை தமிழ் படத்தில் நடித்தது இல்லை.
  • விஜய் பிறந்தநாள் அன்று பிகில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
  • பிகில் அக்டோபர் 26 அன்று வெளியாகவுள்ளது.
New Delhi:

தெறி, மெர்சல் படங்களைத தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி இணைந்துள்ளனர். விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘பிகில் ' என்று அழைக்கப்படுகிறது.

 பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் பரியேறும் பெருமாள் கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.  பெண்கள் கால்பந்து விளையாட்டை மய்யப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. 

இந்தப்படத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக பல தகவல்கள் வந்த நிலையில் பாலிவுட் ஹங்காமாவில் இது குறித்த ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிகில் பட நிறுவனம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஷாருக்கானை அணுகியுள்ளது. பிகில் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமிடுவார் எனத் தெரிகிறது.  இதுவரை தமிழ் படத்தில் ஷாருக்க்கான் நடித்தது இல்லை. பிகில் படம் தான் ஷாருக்கானுக்கான முதல் தமிழ் படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காணலாம்.

பிகில் படத்தில் விஜய் இரட்டைவேடத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

More News
Listen to the latest songs, only on JioSaavn.com