This Article is From May 08, 2020

மீட்பு நடவடிக்கையாக அபுதாபியில் இருந்து 181 பேருடன் கேரளா வந்திறங்கியது சிறப்பு விமானம்!!

இந்தியா வர வேண்டும் என்று வளைகுடா நாடுகளில் மட்டும் சுமார் 2 லட்சம்பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் மிகுந்த அவசியம் உள்ளவர்களை இந்திய தூதரகங்கள் பட்டியலிட்டு வருகின்றன.

மீட்பு நடவடிக்கையாக அபுதாபியில் இருந்து 181 பேருடன் கேரளா வந்திறங்கியது சிறப்பு விமானம்!!

மொத்தம் 64 விமானங்கள் மே 7 முதல் மே 13ம் தேதி வரையில் இயக்கப்படுகின்றன.

ஹைலைட்ஸ்

  • கொரோனா தொற்றால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
  • வளைகுடாவிலிருந்து 2 லட்சம்பேர் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளனர்
  • முன்னுரிமை கொடுத்து இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது
Thiruvananthapuram:

இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இருந்து 49 கர்ப்பிணிகள் உள்பட 177 பயணிகளுடன் சிறப்பு விமானம் ஒன்று கேரளாவை வந்தடைந்தது. 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. விமானம் மற்றும் கப்பல்கள் மூலமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

'வந்தே பாரத் மிஷன்' என்று இந்த மீட்பு நடவடிக்கைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 49 கர்ப்பிணிகள் உள்பட 177 பேருடன் சிறப்பு விமானம் இன்று மாலை 5.46க்கு அபுதாபியில் இருந்து புறப்பட்டு, தற்போது கேரள மாநிலம் கொச்சியை வந்தடைந்துள்ளது. 

சிறப்பு விமானத்தில் வந்த பயணிகள் யாருக்கும் கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இல்லை. 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து மத்திய அரசு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வருவதற்கு அதிரடி தடையை விதித்தது. இதனால் வெளிநாட்டில் தங்கியிருந்து வேலைபார்ப்போர், மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். 

திங்களன்று, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் பல்வேறு கட்டங்களாக மே 7 முதல் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 64 விமானங்கள் மே 7 முதல் மே 13ம் தேதி வரையில் இயக்கப்படுகின்றன. சுமார் 15 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வர வேண்டும் என்று வளைகுடா நாடுகளில் மட்டும் சுமார் 2 லட்சம்பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் மிகுந்த அவசியம் உள்ளவர்களை இந்திய தூதரகங்கள் பட்டியலிட்டு வருகின்றன.

அவற்றின் அடிப்படையில் சிலருக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் இந்தியா கொண்டு வரப்படுவார்கள். 


 

.