This Article is From Jun 29, 2020

இந்தப் படத்தில ஒரு பாம்பு ஒளிஞ்சிட்டு இருக்குங்க..? - கண்டுபிடிங்க பார்க்கலாம்

இந்தப் படத்தில் தெரிவது கார்பெட் பைத்தான் வகைப் பாம்பு.

இந்தப் படத்தில ஒரு பாம்பு ஒளிஞ்சிட்டு இருக்குங்க..? - கண்டுபிடிங்க பார்க்கலாம்

கண்டுபிடிக்க முடியவில்லையா..? பரவாயில்லை, கீழே அதற்கான விடை உள்ளது.

பாம்புகள் மிகவும் மாயாஜாலம் நிரம்பிய உயிரினம். ஓரிடத்தில் பாம்பு மறைந்திருந்தால், அதை அவ்வளவு சுலபமாக கண்டுபிடித்து விட முடியாது. குறிப்பாக அதன் தோள் நிறத்திலேயே இருக்கும் பகுதியில் அது மறைந்துவிட்டால், கண்டுபிடிப்பது கடலில் ஊசியைப் போட்டுத் தேடும் கதைதான். அப்படிப்பட்ட ஒரு படம்தான் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் பரவி, பல நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவை மையமாக கொண்ட Snake Catchers Brisbane, Ipswich, Logan and Gold Coast என்னும் அமைப்பு பைத்தான் வகைப் பாம்பு மறைந்திருக்கும் படத்தைப் பகிர்ந்து, அதைக் கண்டுபிடிக்குமாறு புதிர் கேள்வியை முன்வைத்தது. அவர்கள் பகிர்ந்த படத்தில் இருப்பது சிறிய வகை பாம்பு கூட கிடையாது. சுமார் 8 அடி நீளம் கொண்ட பாம்பு. இருந்தாலும் அதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. 

‘ஸ்பாட் தி ஸ்னேக்' என்று கேப்ஷன் இட்டு அவர்கள் பகிர்ந்துள்ள ஒரு படத்தில், மிகவும் குப்பையான வீட்டின் பின்பக்கம் தெரிகிறது. அதில்தான் பாம்பு பதுங்கியுள்ளது. எங்கு என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்:

கண்டுபிடிக்க முடியவில்லையா..? பரவாயில்லை, கீழே அதற்கான விடை உள்ளது. ஜூம் செய்து பாருங்கள் தெரியும்:

ஆஸ்திரேலியாவில் பைத்தான் வகை பாம்புகள் அதிகம் இருப்பதனால், வீட்டின் சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் தெரிவது கார்பெட் பைத்தான் வகைப் பாம்பு. குயின்ஸ்லேண்டு மியூசியம் அளிக்கும் தகவல்படி, விஷமற்ற இந்த கார்பெட் பைத்தான் பாம்பு, வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது எனவும் திறந்தவெளி காடுகள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லாத வசிப்பிடங்களில் அவை வாழும் என்று கூறப்படுகிறது. 

Click for more trending news


.