மனைவியுடன் சண்டையிட்ட கணவர்… 3 வயது மகளை பலாத்காரம் செய்த கொடுமை!

டெல்லியில் உள்ள குர்கான் என்னும் இடத்தில் தன் சொந்த மகளையே தந்தை பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
மனைவியுடன் சண்டையிட்ட கணவர்… 3 வயது மகளை பலாத்காரம் செய்த கொடுமை!
Gurgaon: 

டெல்லியில் உள்ள குர்கான் என்னும் இடத்தில் தன் சொந்த மகளையே தந்தை பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது.

ஒட்டுநராக பணிபுரியும் அவர் சில நாட்களுக்கு முன்னர், போதையில் இருந்ததாகவும் மனைவியுடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி, கணவருடன் ஏற்பட்டுள்ள சண்டையால் தன் ஒரு வயது நிரம்பிய இளைய மகளுடன் மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மூன்றே வயது நிரம்பிய மூத்த மகளை கணவருடன் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அச்சமயம் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் தன் மூத்த மகளை பலாத்காரம் செய்துள்ளார்.

மறுதினம் காலை 10 மணி அளவில் வீட்டிற்கு வந்த மனைவி, கட்டிலில் இரத்தக் கரையுடன் தன் மூத்த மகளை மயக்க நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே போலீஸாரிடம் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

‘மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அச்சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார் என உறுதி செய்யப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சிறுமி, டெல்லி சாப்டார்ஜாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என போலீஸ் அதிகாரி சாம்ஷேர் சிங் தெரிவித்துள்ளார்.

தலைமறைவாக இருந்த குற்றவாளி நேற்று காலை பிடிப்பட்டார். அவரை போஸ்கோ (POSCO) சட்டத்தில் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் உத்தர பிரதேசம் மாநிலம் காஷ்காங்கைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................