குட்டையான ஆடை அணிந்தால் இங்குள்ளவர்களே ரேப் செய்வார்கள் - அடாவடி ஆண்ட்டியை தட்டிக் கேட்ட இளம் பெண்கள்

அதைக் கேட்ட இளம் வயது பெண்கள் குழு அவரை மன்னிப்பு கேட்க வேண்டுமென சொல்லும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
குட்டையான ஆடை அணிந்தால் இங்குள்ளவர்களே ரேப் செய்வார்கள் - அடாவடி ஆண்ட்டியை தட்டிக் கேட்ட இளம் பெண்கள்

அந்த வீடியோவில் “மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் இந்த வீடியோவை வைரலாக்குவோம்” என்று கூறுகின்றனர்


New Delhi: 

டெல்லியில் குர்கன் அருகில் உள்ள மாலில் மத்திய வயதுடைய பெண்ணொருவர் குட்டையான உடை அணிந்த பெண்களைப் பார்த்து மாலில் உள்ள  ஆண்களே உங்களை ரேப் செய்து விடுவார்கள் என்று போகிற போக்கில் கமெண்ட் அடித்து சென்றுள்ளார். அதைக் கேட்ட இளம் வயது பெண்கள் குழு அவரை மன்னிப்பு கேட்க வேண்டுமென சொல்லும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 

அந்த வீடியோவில் “ இந்த வீடியோவில் பார்க்கும் பெண்மணி இந்த உணவகத்தில் உள்ள ஏழு ஆண்களை எங்களை ரேப் செய்து விடுவார்களாம் ஏனென்றால் நாங்கள் குட்டையான சிறிய உடையினை அணிந்து இருப்பதாகத் தெரிவிக்கிறார்.”

இந்தமாதிரி விரும்பத்தகாத கருத்தினை சொன்னவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கும் 9 நிமிடம் வீடியோ ஒன்றினை ஷிவானி குப்தா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் “மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் இந்த வீடியோவை வைரலாக்குவோம்” என்று அந்த பெண்மணியிடம் பேசுவது கேட்கிறது. அந்த பெண்மணி மன்னிப்பு கேட்காமல் போலீஸைக் கூப்பிடுவேன் என்று கூறுகிறார்.

எட்டு நிமிடங்களுக்குப் பின் “ஹலோ, இந்த பெண்கள் அனைவரும் தங்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாதிரி உடை அணிந்திருக்கிறார்கள். பெற்றோர்களே தயவு செய்து உங்கள் பெண்களை கட்டுப்படுத்துங்கள்” என்றும் சொல்கிறார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................