This Article is From Oct 11, 2018

ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.54 கோடி சொத்துகள் முடக்கம்!

கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமாக இந்தியா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் 54 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கியுள்ளது அமலாக்கத் துறை

ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.54 கோடி சொத்துகள் முடக்கம்!

கார்த்தி சிதம்பரம்

New Delhi:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமாக இந்தியா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் 54 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கியுள்ளது அமலாக்கத் துறை. 

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நடந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவின் இயக்குநர்களாக இருந்தவர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி. 300 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர அப்போது, மத்திய அரசில் அமைச்சராக அங்கம் வகித்த தனது தந்தையான ப.சிதம்ரத்தின் செல்வாக்கை கார்த்தி, தவறுதலாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிபிஐ, இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத் துறை, கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கியுள்ளது. கொடைக்கான் மற்றும் ஊட்டியில் இருக்கும் சொத்துகள், மத்திய டெல்லியில் இருக்கும் பிளாட், இங்கிலாந்தில் இருக்கும் வீடு, பார்சிலோனாவில் இருக்கும் டென்னிஸ் க்ளப், உள்ளிட்ட சொத்துகளை அமலாக்கத் துறை, பிஎம்எல்ஏ சட்டத்துக்குக் கீழ் முடக்கியுள்ளது. 

மேலும், சென்னையில் இருக்கும் வங்கியில் உள்ள 90 லட்ச ரூபாய் பணமும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அனைத்து சொத்துகளின் மொத்த மதிப்பு 54 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

‘மிகவும் வினோதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. தலைப்புச் செய்தியாக இந்த விவகாரத்தை மாற்றுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சொத்துகளை முடக்க வெளியிடப்பட்டிருக்கும் ஆணை, நீதிமன்றத்திற்கு முன் நிற்காது. இந்த ஆணைக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்’ என்று அமலாக்கத் துறை நடவடிக்கை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளர் கார்த்தி சிதம்பரம்.

 
 

.