This Article is From Nov 07, 2019

Video: ’ஜஸ்ட் மிஸ் ஆகியிருந்தாலும்!’- காரின் மீது அமர்ந்த Elephant- நூலிழையில் தப்பிய Tourists!

இந்த சம்பவம் நடந்தபோது காருக்குள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெரியவில்லை.

Video: ’ஜஸ்ட் மிஸ் ஆகியிருந்தாலும்!’- காரின் மீது அமர்ந்த Elephant- நூலிழையில் தப்பிய Tourists!

வீடியோவில், 35 வயதாகும் டூயோ யானை, சுற்றுலா பயணிகள் உள்ள காரை மறிக்கிறது. பின்னர் அதன் மீது ஆமரப் பார்க்கிறது

தாய்லாந்தில் (Thailand) ஒரு யானை (Elephant), சுற்றுலா சென்றவர்களின் கார் மீது அமர்ந்த திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் வாகனத்திற்குள் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது குறித்தான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன.

பாங்காக் போஸ்ட், செய்தியின் அடிப்படையில், இந்த சம்பவம், சென்ற வாரம்  தாய்லாந்தில் உள்ள காவ் யாய் தேசியப் பூங்காவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டுயோ என்கிற யானைதான், பூங்கா வழியாக வந்த காரின் மீது அமரப் பார்த்துள்ளது. வாகனத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

வீடியோவில், 35 வயதாகும் டூயோ யானை, சுற்றுலா பயணிகள் உள்ள காரை மறிக்கிறது. பின்னர் அதன் மீது ஆமரப் பார்க்கிறது. யானையின் பிடியில் சிறிய தளர்வு ஏற்பட்ட நேரம் பார்த்து, டிரைவர் அங்கிருந்து பறக்கிறார். 

வீடியோவைப் பாருங்கள்:
 

இந்த சம்பவம் நடந்தபோது காருக்குள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், ஃபாஸகோர்ன் நில்டார்ச் என்பவர் மட்டும்தான் வாகனத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அவரே, தனது முகநூலில் யானையின் படங்களையும், காருக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் பகிர்ந்துள்ளார். 

இந்த சம்பவத்திற்குப் பிறகு பூங்கா நிர்வாகம், காட்டு யானைகளைப் பார்த்தால் 30 மீட்டருக்கு முன்னரே வாகனத்தை நிறுத்திவிடுமாறு சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

அதே நேரத்தில் டூயோ யானை, எப்போதும் யாரையும், அல்லது எந்தப் பொருளையும் சேதப்படுத்தாது என்றும் பூங்கா நிர்வாகத்தினர் நற்சான்று வழங்கியுள்ளனர். 

Click for more trending news


.