This Article is From Apr 09, 2020

கொரோனாவிலிருந்து பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரத்யேக மாஸ்க் கண்டுபிடிப்பு!

தாய்லாந்தில் உள்ள சமுத் பிராகர்ன் மாகாணத்தில் அமைந்திருக்கும் பவோலோ மருத்துவமனையில்...

கொரோனாவிலிருந்து பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரத்யேக மாஸ்க் கண்டுபிடிப்பு!

இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியுமென்று மருத்துவமனை வட்டாரம் கூறுகின்றது. 

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பல புதிய விஷயங்களுக்கு அவை வித்திட்டுள்ளன. குறிப்பாக மக்கள் தங்கள் பாதுகாப்பு விஷயங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை அடுத்த கட்டத்திற்கே சென்றுவிட்டது என்று சொல்லலாம். 

தாய்லாந்தில் உள்ள சமுத் பிராகர்ன் மாகாணத்தில் அமைந்திருக்கும் பவோலோ மருத்துவமனையில் (Paolo Hospital), பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கென்று பிரத்யேக மாஸ்க்களை தயாரித்துள்ளனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியுமென்று மருத்துவமனை வட்டாரம் கூறுகின்றது. 

இது குறித்து பவோலோ மருத்துவமனை, தனது முகநூல் பக்கத்தில், “எங்கள் மருத்துவமனையில் பிறந்த பிஞ்சுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு. முகத்தை மறைக்கும் மாஸ்க். சோ கியூட்!” என்று சிலப் புகைப்படங்களைப் பதிவிட்டு பகிர்ந்துள்ளது. 

ஒரு போட்டோவில், குழந்தை ஒன்றுக்கு முக மாஸ்க் முற்றிலும் போடப்பட்டு, அந்தக் குழந்தை நிம்மதியாக தூங்குவது தெரிகிறது. இன்னொரு படத்தில், மருத்துவமனை ஊழியர் குழந்தைக்கு மாஸ்க் மாட்டிவிடுவது தெரிகிறது. 

அந்த ஃபேஸ்புக் பதிவைப் பார்க்க:

ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து இந்தப் பதிவிற்கு லைக்ஸ்களும் ஷேர்களும் குவிந்து வருகின்றன. பலரும், மருத்துவமனை நிர்வாகத்தைப் புகழ்ந்து கருத்திட்டு வருகிறார்கள். 

ஒரு ஃபேஸ்புக் பயனர், “சோ சோ கியூட்,” என்கிறார். இன்னொருவர், “செவிலியர்கள் மிகச் சிறந்த பணி செய்கிறார்கள்” என்று கருத்திடுகிறார். 

தாய்லாந்தில் இதுவரை 2,300 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கையும் அமல் செய்துள்ளது தாய்லாந்து அரசு. 


 

Click for more trending news


.