This Article is From May 21, 2019

முதலில் விவிபேட் இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும்; தேர்தல் ஆணையத்தில் 22 எதிர்கட்சிகள் மனு!

மக்களவைத் தேர்தல் 2019: பாஜக தலைமையிலான கூட்டணி எளிதாக மீண்டும் வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தொடர்ந்து, எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நாளை காலை அழைப்பு விடுப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது என அபிஷேக் மனு சிங்வி கூறினார்.

New Delhi:


வாக்கு எண்ணிக்கையை முறையாக நடந்த வேண்டும் என்றும், 5 மாநிலங்களில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பி, 22 எதிர்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இன்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். 

2014 தேர்தலை போலவே பாஜக பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 303 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 126 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக நேற்று முதல் சமூகவலைதளங்களில் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன. 

இந்நிலையில், மாநில கட்சிகளை ஓரணியில் திரட்ட சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட முயற்சிகளை தொடர்ந்து,  டெல்லியில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், அந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, 50 சதவீத வாக்கு எண்ணும் இயந்திரங்களுடன் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றிலும், தலா 5 வாக்குச்சாவடிகளில்  ஒப்புகைச்சீட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று 22 எதிர்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் ஒன்று சேர்ந்து மனு அளித்தனர். அதில், முதலில் 5 விவிபேட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி, ‘நாங்கள் இந்தப் பிரச்னையை கடந்த மூன்று மாதங்களாக எழுப்பி வருகிறோம். எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளோம். தற்போது, நாங்கள் கேட்கும் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் ஏன் பதில் சொல்ல மறுக்கிறது. நாளை காலையில் மீண்டும் சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கையை நிராகரிப்பதற்கு அதில் எந்த காரணங்களும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

.