This Article is From Nov 10, 2018

தானாக நகர்ந்து செல்லும் தீப்பற்றிய கார் - வைரலாகும் வீடியோ காட்சி!

சைபர்சிட்டி அருகில் உள்ள மேம்பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீப்பற்றிய கார் நகர்ந்து கொண்டே முன் சென்ற வாகனத்தின் மீது மோதியது.

Gurugram:

சைபர்சிட்டி அருகில் உள்ள மேம்பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் சன்தால் என்பவர் தீபாவளி பரிசினை தனது உறவினர்களுக்கு அளிக்க சென்ற போது அவருடைய ஹோண்டா சிட்டி கார் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது.

டெல்லி அருகில் குருகிரம் பகுதியில் மேம்பாலத்தில் செவ்வாயன்று கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தின் போது மொபைலில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காரின் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ராகேஷ் சன்தால் தீபாவளி பரிசினை தனது உறவினர்களுக்கு அளிக்க சென்ற போது அவருடைய ஹோண்டா சிட்டி கார் எதிர்பாரத விதமாக தீப்பற்றி எரிந்தது. அவர் தீப்பற்றி எரியும் காரிலிருந்து குதித்துவிட்டார் அதன் பின்னும் கார் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மேலும் அந்தக் கார் முன் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. ராகேஷ் சன்தால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் கூறுகையில், காரிலிருந்து விநோதமான சத்தம் கேட்டதாகவும், அடிக்கடி காரிலிருந்து இறங்கி சோதனை செய்தும் தன்னால் காரில் என்ன பிரச்சனை என்பதை கண்டறிய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கார் தீப்பற்றியதும் பிரேக்கை அழுத்த முயற்சித்துள்ளார். முடியாத காரணத்தால் காரிலிருந்து குதித்து தப்பித்துள்ளார். கார் தடுப்பில் மோதி நின்றதும் அங்கு மக்கள் சிலர் கூடினர். இறுதியில் தீயணைப்பு வீரர்கள் வந்து பற்றி எரிந்த காரின் தீயை அணைத்தனர்.


 

.