This Article is From Feb 19, 2020

கென்யாவை சேர்ந்த ஆணும், பெண்ணும் குர்கான் விடுதியில் சடலமாக கண்டெடுப்பு!

முதற்கட்ட தகவலின் படி, இரு சடலங்களும் 3 முதல் 4 நாட்கள் வரை தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

கென்யாவை சேர்ந்த ஆணும், பெண்ணும் குர்கான் விடுதியில் சடலமாக கண்டெடுப்பு!

பிரேத பரிசோதனை முடிவுக்ககாக போலீசார் காத்திருக்கின்றனர். (Representational)

Gurugram (Haryana):

கென்யா நாட்டை சேர்ந்த இருவர் குர்கானில் உள்ள விடுதியில் சடலமாக கண்டெக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக குர்கான் துணை காவல் ஆணையர் பிரீத் சிங் கூறும்போது, கென்யாவை சேர்ந்தவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக எங்களுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்வயிட்ட போது, அந்த அறையின் தரையில் சடலமாக கிடந்தது. 

மற்றொரு ஆணின் சடலம் கெய்சரில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. முதற்கட்ட தகவலின் படி, இரு சடலங்களும் 3 முதல் 4 நாட்கள் வரை தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதில் அந்த பெண் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அந்த ஆண் அவரின் நண்பர் என்று தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

கென்யா தூதரகத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, விசாரணைகள் நடந்து வருகிறது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.