This Article is From Oct 29, 2019

‘ஐ.எஸ். தீவிரவாத தலைவர் அபுபக்கர் பக்தாதி தற்கொலை செய்துகொண்டார்’ – ட்ரம்ப்!!

ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா அமைப்பின் ஈராக் பிரிவில் சேர்ந்த பக்தாதி, பின்னாளில் பல குழுக்களை ஒருங்கிணைத்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஏற்படுத்தினார். 2010-ல் அவர் அதன் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளார் ட்ரம்ப்.

Washington:

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக ஐ.எஸ்.அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது அதனை அமெரிக்கஅதிபர் உறுதி செய்திருக்கிறார்.

வெள்ளை மாளிகையின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ட்ரம்ப் கூறியதாவது-

பக்தாதி எங்கிருந்தாலும் அவரைக் கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்பதற்கக எனது தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் தேடுதலை வேட்டையில் ஈடுபட்டோம்.

அமெரிக்க நடத்திய தேடுதலின்போது தற்கொலைப்படை வெடிகுண்டு உடையை அணிந்து கொண்டு அல் பக்தாதி தற்கொலை செய்து கொண்டார். ஒரு சுரங்கப்பாதையில் இந்த சம்பவம் நடந்தது.

வெடிகுண்டு ஆடை மூலமாக தனது பிள்ளைகள் 3 பேரை பக்தாதி கொன்றுள்ளார். மிகவும் கோழைத்தமான முறையில் பக்தாதி நடந்து கொண்டிருக்கிறார்.

நாயைப் போல் பக்தாதியும், அவரது ஆதரவாளர்களும் உயிரிழந்துள்ளனர். அவரைக் கொல்லும் முயற்சியில் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த ரஷ்யா, துருக்கி, சிரியா, ஈராக் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா அமைப்பின் ஈராக் பிரிவில் சேர்ந்த பக்தாதி, பின்னாளில் பல குழுக்களை ஒருங்கிணைத்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஏற்படுத்தினார். 2010-ல் அவர் அதன் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.