This Article is From Jul 17, 2019

ஹெல்மட் போடாமல் வந்தவரைத் தடுத்த போலீஸ்; தாண்டவமாடிய பெண்- டெல்லி சாலையில் பரபர! #Video

செவ்வாய் கிழமை மாலை 6:30 மணிக்கு இந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

ஹெல்மட் போடாமல் வந்தவரைத் தடுத்த போலீஸ்; தாண்டவமாடிய பெண்- டெல்லி சாலையில் பரபர! #Video

டிராஃபிக் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில், பிரச்னை செய்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

New Delhi:

டெல்லியில், ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை, அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த நபருடன் வந்த பெண், போலீஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர், போலீஸாரை தள்ளிவிட்டு, பிரச்னை செய்துள்ளார். டெல்லியில் நடு ரோட்டில் நடந்த இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

வாகனத்தில் வந்து பிரச்னை செய்த இருவரும் மது அருந்தி, போதையில் இருந்ததாக போலீஸ் தரப்பு கூறுகிறது. 

காவலர்களுடன் அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர், ‘எங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆகையால் நாங்கள் அவசரமாக சென்று கொண்டிருக்கிறோம்' என்று கூறுவது வீடியோவில் தெரிகிறது. 

ஒரு கட்டத்தில் பிரச்னை கையை மீறிப் போகவே, காவலர் ஒருவர், பைக்கில் இருந்த சாவியை எடுக்கிறார். அதையும் அந்தப் பெண் பிடுங்கிக் கொள்கிறார். 

செவ்வாய் கிழமை மாலை 6:30 மணிக்கு இந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டிராஃபிக் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில், பிரச்னை செய்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் இரவே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட ஆணின் பெயர், அனில் பாண்டே என்றும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணின் பெயர் மாதுரி என்றும் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

.