ஹெல்மெட் அணிந்து செல்லும் நாய் : இணையத்தை வென்ற கலக்கல் புகைப்படம்

டெல்லியில் ஒருவர் தன் வளர்ப்பு நாய்க்கு ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டரில் அழைத்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஹெல்மெட் அணிந்து செல்லும் நாய் : இணையத்தை வென்ற கலக்கல் புகைப்படம்

போக்குவரத்து காவல்துறைக்கு சிறந்த பிரச்சார புகைப்படமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

திருத்தப்பட்ட மோட்டார் சட்டத்தில் அபராதக் கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டதற்கு  எதிர்வினையாக பல  கேலியான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் டெல்லியில்  ஒருவர் தன் வளர்ப்பு நாய்க்கு ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டரில் அழைத்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.  

திருத்தப்பட்ட மோட்டார் சட்டம் அமல்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே செப்டம்பர் மாதத்தில் இணையத்தை கவர்ந்த புகைப்படம் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது.  ட்விட்டர் பயனாளர் பிரேர்னா சிங் பிந்த்ரா இரண்டு நாட்களுக்கு முன்பு புகைப்படத்தை ஆன்லைனில் பகிர்ந்துள்ளார். 

டெல்லி போக்குவரத்து காவல்துறைக்கு சிறந்த பிரச்சார புகைப்படமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

2017 ஆம் ஆண்டில், டெல்லியில் இருந்து மூன்று நாய்கள் தங்கள் உரிமையாளருடன் ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ ஆன்லைனில் வைரலாகியது.

Click for more trending news


More News