டெல்லியில் மெட்ரோ ரயில் கதவில் சிக்கிக் கொண்ட பெண்ணின் சேலை: பிளாட்பாமில் இழுத்துச் செல்லப்பட்டார்

ரயிலின் உள்ளே இருந்த பயணிகள் நீல பட்டனை (எமர்ஜென்சி பட்டன்) அழுத்தியதால் ரயில் உடனடியாக நின்றது

 Share
EMAIL
PRINT
COMMENTS
டெல்லியில் மெட்ரோ ரயில் கதவில் சிக்கிக் கொண்ட பெண்ணின் சேலை: பிளாட்பாமில் இழுத்துச் செல்லப்பட்டார்

புளூ லைன் டெல்லி மெட்ரோ ரயில்சேவை துவாரகாவிலிருந்து நொய்டா எலக்ட்ரானிக் சிட்டிவரை செயல்படுகிறது (File)


New Delhi: 

டெல்லியில் 40 வயது பெண்ணொருவர் மெட்ரோ ரயில் கதவில் சேலை சிக்கிக் கொண்ட நிலையில் பிளாட் பார்மில் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் மோட்டிநகர் புளூ லைன் மெட்ரோ நிலையத்தில  நடந்தேறியது. கீதா என்ற பெண் தன் மகளுடன் நவாடாவிலிருந்து பயணம் செய்து வந்துள்ளார். மோட்டி நகர் ஸ்டேஷனில் இறங்க முற்பட்ட போது சேலை முந்தானை  மெட்ரோ ரயில் கதவுகளுக்கிடையே சிக்கிக் கொண்டது.  ரயில் நகர்ந்த நிலையில் சில அடி தூரம் பிளாட்பாமில் இழுத்துச் செல்லப்பட்டதாக  கணவர் ஜெக்தீஷ் பிரசாத் கூறியுள்ளார். 

குடும்பத் தலைவியான கீதா, தலையில் அடிபட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

“என் மகள் போனில் தகவல் தெரிவித்ததால் உடனடியா ரயில் நிலையத்திற்கு வந்தேன். ரயிலின் உள்ளே இருந்த பயணிகள் நீல பட்டனை (எமர்ஜென்சி பட்டன்) அழுத்தியதால் ரயில் உடனடியாக நின்றது” என்று தெரிவித்தார்.

டெல்லி மெட் ரோ ரயில் கார்ப்ரேஷனின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார். மோட்டி நகர் மற்றும் ராஜேந்திர பிளேஸ்க்கு இடையே சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி மெட் ரோ ரயில் கார்ப்ரேஷன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புளூ லைன் டெல்லி மெட்ரோ ரயில்சேவை துவாரகாவிலிருந்து நொய்டா எலக்ட்ரானிக் சிட்டிவரை செயல்படுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................