ஃபனி புயல் : 250 அடி உயர கிரேன் விழுந்ததில் கட்டிடங்கள் தரைமட்டம்!! வைரலாகும் வீடியோ!

கடந்த 20 ஆண்டுகளில் வீசிய புயல்களில் ஃபனி மிகவும் தீவிரமான புயல் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஃபனி புயல் : 250 அடி உயர கிரேன் விழுந்ததில் கட்டிடங்கள் தரைமட்டம்!! வைரலாகும் வீடியோ!

ஃபனி புயல் இன்று கரையை கடந்தது.


Bhubaneswar: 

ஒடிசாவில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய ஃபனி புயலால் 250 அடி உயர கிரேன் கட்டிடம் ஒன்றின் மீது விழுந்தது. இதில் அந்த கட்டிடம் தூள் தூளாகி தரைமட்டமானது. 

வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக மையம் கொண்டிருந்த ஃபனி புயல் இன்று மாலை ஒடிசாவின் வழியே கரையை கடந்துள்ளது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை புயல் வீசியுள்ளது. இதனால் புரி மற்றும் புவனேஸ்வரத்தில் மின் கம்பங்கள், மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. 

முன்னெச்சரிக்கையாக 11 லட்சம்பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். புயல் தாக்கிச் சென்ற இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

இதற்கிடையே புவனேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த இடத்தில் 250 அடி உயர ராட்சத கிரேன் ஒன்று சரிந்து கட்டிடங்கள் மீது விழுந்தது. இதில் கட்டிடங்கள் தூள் தூளாகி தரைமட்டம் ஆகின. அந்த கட்டிடத்திற்குள் யாரேனும் இருந்தார்களா, உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டனவா என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவரவில்லை. 

இன்னொரு வீடியோவில், எய்ம்ஸ் மருத்துவனையின் கூரை ஃபனி புயலில் பறக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் வீசிய புயல்களில் ஃபனி மிகவும் வலுவானது என்று கருதப்படுகிறது. நாளை வரையில் 147 ரயில் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எவரெஸ்ட் சிகரம் வரைக்கும் ஃபனி புயல் கைவரிசை காட்டியுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................