This Article is From Jul 23, 2020

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 45,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Coronavirus India updates: மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12 லட்சத்தை கடந்து, 12,38,635 ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 45,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Coronavirus: இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 45,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!

ஹைலைட்ஸ்

  • புதிய உச்சமாக ஒரே நாளில் 45,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!
  • மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12 லட்சத்தை கடந்தது
  • இதுவரை மொத்தமாக 29,861 பேர் வரை உயிரிழந்துள்ளனர்
New Delhi:

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 45,720 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12 லட்சத்தை கடந்து, 12,38,635 ஆக உள்ளது. இதுவரை 7,82,607 பேர் குணமடைந்துள்ளனர். 29,861 பேர் வரை உயிரிழந்துள்ளனர். குணமடைபவர்களின் விகிதமானது 63.18 சதவீதமாக உள்ளது.

நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 3,5,823 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 1.5 கோடி பேர் வரை சோதனை செய்துள்ளதாக அரசு தரவுகள் தகவல் தெரிவித்துள்ளன. இதில், மகாராஷ்டராவில் தான் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபாதிப்பு பதிவாகியுள்ள 5 மாநிலங்களின் பட்டியிலில், மகாராஷ்டிரா (10,576), ஆந்திர பிரதேசம் (6,045), தமிழகம் (5,849), கர்நாடகா (4,764) உத்தர பிரேதசம் (2,300) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள 5 மாநிலங்களாக, தமிழகம் (518), மகாராஷ்டிரா (280), ஆந்திரா (65), கர்நாடகா (55) மற்றும் மேற்கு வங்கம் (39) உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள் தங்களது முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு அறிவித்து வருகின்றன. தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன.

மேற்கு வங்கத்தின் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஊரடங்கானது இன்று முதல் அமலானது, இந்த அறிவிப்பு வெளியான ஒரு நாள் கழித்து பாதிப்பு எண்ணிக்கை 2,291 ஆகவும், உயிரிழப்பு 39 ஆகவும் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.

.