'மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது' - டெல்லி அரசு அதிரடி உத்தரவு!!

கட்டாய மாஸ்க் முடிவு, இன்று முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற அவசர கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் மற்றும் உயர் அதிகாரிகளும், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் கலந்து கொண்டனர்.

'மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது' - டெல்லி அரசு அதிரடி உத்தரவு!!

மத்திய அரசும் மக்கள் மாஸ்க் அணிந்துதான் வெளியே வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • மாஸ்க் அணியாமல் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என டெல்லி அரசு உத்தரவு
  • முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்
  • டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை
New Delhi:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் டெல்லியில் மக்கள் யாரும் மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இதே உத்தரவை மகாராஷ்டிர அரசு பிறப்பித்திருந்தது. சண்டிகரிலும் மாஸ் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 576-ஆக உயர்ந்திருக்கிறது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

டெல்லியில் கடந்த 24 மணிநேரமாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்ற தகவல் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது-

மாஸ்க் அணிவதால் கொரோனா மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும். எனவே, வீட்டை விட்டு வெளியே அத்தியாவசிய தேவைகளுக்கு வருவோர் மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். துணியால் தயாரிக்கப்பட்ட மாஸ்க்கை அணிந்திருந்தாலும் போதுமானது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த கட்டாய மாஸ்க் முடிவு, இன்று முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற அவசர கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் மற்றும் உயர் அதிகாரிகளும், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் கலந்து கொண்டனர்.

மத்திய அரசும் மக்கள் மாஸ்க் அணிந்துதான் வெளியே வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா அறிகுறி இல்லாதவர்களும், மூச்சு விடுவதற்கு சிரமப்படுபவர்களும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மாஸ்க்குகளை அணிந்து கொள்ளலாம். குறிப்பாக வெளியே வரும்போது மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா சமூக பரவலாக மாறாமல் தடுக்க முடியும்' என்று தெரிவித்திருந்தது.