This Article is From Apr 14, 2020

தரையில் கொட்டப்பட்ட பாலை நாய்களுடன் சேர்ந்து சேகரித்த மனிதர்! வைரலாகும் வீடியோ

ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, கொரோனா ஊரடங்கால் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும், வேலையின்மை அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தரையில் கொட்டப்பட்ட பாலை நாய்களுடன் சேர்ந்து சேகரித்த மனிதர்! வைரலாகும் வீடியோ

தரையில் கொட்டிய பாலை கைகளால் அள்ளி சிறிய பானையில் சேகரிக்கும் நபர்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
  • கொட்டிய பாலை கைகளால் அள்ளி சேகரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது
  • நாட்டின் பல மாநிலங்களில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது
Lucknow:

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படவுள்ள சூழலில், தரையில் கொட்டப்பட்ட பாலை நாய்களுடன் சேர்ந்து நபர் ஒருவர் சேகரிக்கிறார். இந்த காட்சி, ஊரடங்கு உத்தரவு மக்களை எந்த நிலைக்கு தள்ளியுள்ளது என்பதை உணர்த்துவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

இந்த சம்பவம் தாஜ் மகாலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் ஆக்ராவின் ராம் பாக் சவுரகா என்ற இடத்தில் நடந்துள்ளது. இங்கு பால் லாரி ஒன்று கவிழ்ந்ததால், அதிலிருந்த பால் முழுவதும் சாலையில் கொட்டியது. அதனை நாய்கள் சில பசி மிகுதியால் குடிக்த் தொடங்கின.

கொட்டிய பால், சிறிதளவு குழி ஒன்றில் கிடந்துள்ளது. அதனை நபர் ஒருவர் கைகளால் அள்ளி, சிறிய பானையில் சேகரிக்கிறார். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி விமர்சனங்களை குவித்து வருகிறது. 
 

வீடியோவை பார்க்க : 

இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மாதம் 25-ம்தேதி முதற்கொண்டு 21 நாட்கள் உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இதில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு நடவடிக்கையால் ஏழை எளிய மக்கள், வெளி மாநில தொழிலாளர்கள், அன்றாடம் கூலி வேலை பார்ப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் 40 கோடி தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளதென்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. 80 கோடி மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

எந்தவொரு முன் அறிவிப்பும், கால அவகாசமும் அளிக்காமல் மத்திய அரசு ஊரடங்கை அறிவித்து விட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன. அதே நேரத்தில் மக்கள் உயிரை காக்க வேண்டும் என்றால், இந்த அதிரடி நடவடிக்கை தவிர்க்க முடியாத ஒன்று என அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லப்படுகிறது. 

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 905 அதிகரித்து 9,352-ஆக உயர்ந்திருக்கிறது. 

ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, கொரோனா ஊரடங்கால் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும், வேலையின்மை அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 

.