This Article is From May 22, 2020

மும்பையில் நாளை முதல் ஸ்விக்கி, ஜொமட்டோ மூலம் மதுபாட்டில்கள் ஹோம் டெலிவரி தொடக்கம்!

சேவையை வழங்குவதற்கு மும்பை மாநகராட்சியின் அனுமதியை மதுக்கடைகள் பெற்றிருக்க வேண்டும். அவர்களிடமிருந்து ஸ்விக்கி, ஜொமட்டோ பணியாளர்கள் மூலமாக மதுபாட்டில்கள் வழங்கப்படவுள்ளது. 

மும்பையில் நாளை முதல் ஸ்விக்கி, ஜொமட்டோ மூலம் மதுபாட்டில்கள் ஹோம் டெலிவரி தொடக்கம்!

மும்பையில் 882 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

Mumbai:

கொரோனாவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நாளை முதல் மதுபாட்டில் விற்பனை ஆன்லைனில் தொடங்கப்படவுள்ளது.

ஸ்விக்கி, ஜொமட்டோ ஆப்பை பயன்படுத்தி தேவையான மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வீட்டில் இருந்தவாறே ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தடுப்பு பகுதிகளில் (Containment Zones) மதுபாட்டில் ஹோம் டெலிவரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை வழங்குவதற்கு மும்பை மாநகராட்சியின் அனுமதியை மதுக்கடைகள் பெற்றிருக்க வேண்டும். அவர்களிடமிருந்து ஸ்விக்கி, ஜொமட்டோ பணியாளர்கள் மூலமாக மதுபாட்டில்கள் வழங்கப்படவுள்ளது. 

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக மும்பை உள்ளது. இங்கு மட்டும் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மும்பையில் 882 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உள்ளது. அவர்களில் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர். 

.