நாடு முழுவதும் 70,000ஐ நெருங்கும் கொரோனா உயிரிழப்பு!

உலக அளவில் அமெரிக்கா 62,00,375 நோயாளிகளுடன் கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவதாக பிரேசில் 40,91,801 நோயாளிகளை கொண்டுள்ளது.

நாடு முழுவதும் 70,000ஐ நெருங்கும் கொரோனா உயிரிழப்பு!
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 லட்சத்தினை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது 40,23,179 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது உலக அளவில் தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலுக்கு மிக நெருக்கமானதாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,089 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டு மொத்த உயிரிழப்பு 69,561 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 31,07,223 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோரின் விகிதமானது 77.2 சதவிகிதமாக உள்ளது. தற்போது 8,46,395 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Newsbeep

உலக அளவில் அமெரிக்கா 62,00,375 நோயாளிகளுடன் கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவதாக பிரேசில் 40,91,801 நோயாளிகளை கொண்டுள்ளது.