This Article is From Mar 26, 2020

ஊரடங்கின்போது ஆவின் பால் தொடர்ந்து கிடைக்குமா..?- அரசு விளக்கம்

Coronavirus in Tamilnadu: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததன்படி, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

ஊரடங்கின்போது ஆவின் பால் தொடர்ந்து கிடைக்குமா..?- அரசு விளக்கம்

Coronavirus in Tamilnadu: "21 நாட்கள் என்பது விடுமுறையல்ல. உங்களையும், உங்களது குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கான அரசின் உத்தரவுதான் இந்த ஊரடங்கு"

ஹைலைட்ஸ்

  • நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது
  • தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது
  • தமிழகத்தில் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்

Coronavirus in Tamilnadu: தேசிய அளவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவுகளும், பூட்டுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோன பாதிப்பு அதிகரித்து வருகின்றது. 

ஏற்கெனவே 23 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 26 ஆக அதிகரித்துள்ளதாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததன்படி, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனால் நேற்று முதல் சந்தைகள் உட்பட பல இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் திறந்திருப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று சொல்லப்பட்டாலும், பல்வேறு நெருக்கடிகளால் பல இடங்களில் அவைகள் திறக்கப்படுவதில்லை. 

இந்நிலையில், “ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும்” என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. 

நேற்று மாநில மக்களிடம் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தனிமைப்படுத்துதல் என்பது உங்கள் குடும்பத்தையும், நாட்டையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்காகத்தான். உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போலத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

21 நாட்கள் என்பது விடுமுறையல்ல. உங்களையும், உங்களது குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கான அரசின் உத்தரவுதான் இந்த ஊரடங்கு. அத்தியாவசிய தேவைப் பொருட்களான காய்கறி, பால், இறைச்சி போன்றவை மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுய மருத்துவம் செய்ய வேண்டாம். காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் தனியார், அரசு மருத்துவமனையை நாடுங்கள். வெளியே சென்று விட்டு வீடு திரும்பினால் கை,கால்களை கழுவ வேண்டும். வீண் வதந்திகளை பரப்புவோர்கள் மீது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்,” என்று எச்சரிக்கை விடுத்தார். 

.