டெல்லி சி.ஆர்.பி.எஃப் தலைமையகத்திற்குத் தற்காலிகமாக சீல்!!

அடுத்த உத்தரவு வரும் வரை யாரும் கட்டிடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டெல்லி சி.ஆர்.பி.எஃப் தலைமையகத்திற்குத் தற்காலிகமாக சீல்!!

At least 1,300 deaths linked to the highly infectious COVID-19 have been reported so far.

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 ஆயிரத்தினை நெருங்குகின்ற நிலையில், தற்போது டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) தலைமையகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தலைமையகத்தில் பணிபுரியும் சிறப்பு இயக்குநர் ஜெனரல் (SDG) தரவரிசை அதிகாரியின் தனிப்பட்ட செயலாளர் தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட பின்னர் தலைமையகம் சுத்திகரிப்புக்காகத் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த உத்தரவு வரும் வரை யாரும் கட்டிடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,644 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.