This Article is From Jan 31, 2020

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை! களத்தில் இறங்கியது இந்திய ராணுவம்!!

கொரோனா வைரஸ் : சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் மாணவர்களை தனி இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க இந்திய ராணுவம் தரப்பில் பிரமாண்ட மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

போயிங் 747 ரகத்தை சேர்ந்த ஏர் இந்தியா விமானம் சீனாவுக்கு சென்று மாணவர்களை அழைத்து வரவுள்ளது.

New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவம் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. 

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் மாணவர்களை தனி இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க டெல்லி அருகேயுள்ள மானேசரில் ராணுவம் தரப்பில் பிரமாண்ட மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து சுமார் 300 மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை 2 வாரத்திற்கு தங்க வைத்து, நிலைமை கண்காணிக்கப்படும். இதற்காக தனி மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

ra76ktoo

இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள மருத்து முகாமின் அமைப்பு

 
.

இந்திய மாணவர்கள் வரும்போது, விமான நிலையத்தில் விமான நிலைய மருத்துவ அதிகாரிகள், ராணுவ மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு பரிசோதனையில் ஈடுபடும். அதில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இருப்பவர்கள், ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். 

பரிசோதனையின்போது மாணவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்படுவார்கள்.

முதல் வகையில் அறிகுறி இருப்பதாக கருதப்படும் மாணவர்கள். அதாவது காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருந்தால் அவர்கள் நேரடியாக ராணுவ மருத்துவ முகாமுக்கு அனுப்பப்படுவார்கள். 

இரண்டாவது வகையில், உன்னிப்பாக கவனிக்க கூடிய மாணவர்கள். அதாவது, இந்த மாணவர்களுக்கு அறிகுறிகள் இருக்காது ஆனால், கடல் உணவு மற்றும் இறைச்சிக் கடைக்கு அவர்கள் முன்பு சென்றிருக்கலாம். இவர்கள் இரண்டாம் வகையினர். ஏனென்றால், உஹானில் உள்ள கடல் உணவு மார்க்கெட்டில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வைரஸ் உடலுக்குள் புகுந்து 14 நாட்களில்தான் தனது வேலையை தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

fn7o6534

மிகவும் எமர்ஜென்சியாக இருந்தால் மட்டுமே இங்கிருப்பவர்கள் வெளியே செல்லவும் உள்ளே வரவும் அனுமதிக்கப்படுவார்கள்.


.

கடைசியாக, இந்த இரு வகையிலும் சாராத நபர்கள். அதாவது அவர்களிடம் அறிகுறிகள் இருக்காது. மீன், இறைச்சி மார்க்கெட்டிற்கு அவர்கள் சென்றிருக்க மாட்டார்கள். 

இந்த வகையினரும்  ராணுவ மருத்துவ முகாமுக்கு அனுப்பப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். இந்த மூன்று வகையினருக்கும் மாஸ்க்குகள் அளிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை அவ்வப்போது செய்யப்படும். 14 நாட்கள் கடந்த பின்னரும் அறிகுறிகள் ஏதும் தென்படாவிட்டால் அனைவரும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

வீட்டிற்கு சென்ற பின்னரும் அவர்கள் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பார்கள். தேவைப்பட்டால் கூடுதல் மருத்துவ உதவிகள் வழங்கப்படும். 

தனி நபர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அவர்களும், தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் பரிந்துரை மற்றும் சோதனை முடிவுகளின்படி ராணுவ மருத்துவ முகாமில் அனுமதிக்கப்படுவார்கள். 

6mlmqgss

தெற்கு டெல்லியில் இந்தோ திபெத் துணை ராணுவம் சார்பாக 600 படுக்கைகள் கொண்ட மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் முடிந்த பின்னரும், 2 பரிசோதனைகள் அடுத்தடுத்து நடத்தப்படும். இந்த இரண்டிலும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர்தான், சிகிச்சை பெறுபவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். 


 

.