நாடு முழுவதும் 75,000ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு: முழு விவரம்!!

ஒட்டுமொத்த பாதிப்பானது 44,65,864 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 75,062 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9,19,018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை

நாடு முழுவதும் 75,000ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு: முழு விவரம்!!
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 44.65 லட்சத்தினை கடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 95,735 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல  1,172 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 44,65,864 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 75,062 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9,19,018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 34,71,784 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Newsbeep

இதன் காரணமாக இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.