This Article is From Aug 05, 2019

''காஷ்மீர் தீவிரவாதத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதுதான் காரணம்'' : அமித் ஷா

ஜம்மு காஷ்மீரை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் என இரண்டாக பிரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்து பேசினார்.

''காஷ்மீர் தீவிரவாதத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதுதான்  காரணம்'' : அமித் ஷா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது நாடு முழுவதும் விவாதமாக மாறியுள்ளது.

New Delhi:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதுதான் அங்கு தீவிரவாதத்திற்கு முக்கிய காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமாக பிரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதேபோன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியலமைப்பு சாசன சட்டம் 370 நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் காணப்படும் நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்து பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது-

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கியிருப்பதற்கு காரணம் அங்கு சிறப்பு அந்தஸ்து இருப்பதுதான். இப்போது தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நேரம் வந்து விட்டது. சிறப்பு அந்தஸ்தை நீக்காவிட்டால் காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்கவே முடியாது. 

அரசியல் சாசன பிரிவு 370-யை நீக்குவதன் மூலம் ஜம்மு காஷ்மீர் - இந்தியா இடையிலான பிணைப்பை உறுதிபடுத்தியுள்ளோம். வாக்கு வங்கி அரசியலை வெற்றி கொண்டு சட்டம் 370-யை நீக்க ஒரு வலிமையான அரசியல் தலைவர் வேண்டும். அந்த நபராக மோடி இருப்பார்.

எங்களிடம் 5 ஆண்டுகளுக்கு ஜம்மு காஷ்மீரை கொடுத்துப் பாருங்கள். நாட்டிலேயே மிக உயர்ந்த மாநிலமாக ஜம்மு காஷ்மீரை மாற்றிக் காட்டுகிறோம்.
இவ்வாறு அமித் ஷா பேசினார். விவாதத்தின்போது, ஜனநாயகத்தை மத்திய பாஜக அரசு படுகொலை செய்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

.