This Article is From Aug 01, 2019

ஓய்கிறது குழப்பம்; கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி... தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு!

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகே காரியக் கமிட்டியை கூட்ட வாய்ப்புள்ளது என்றும் எந்த நாளில் நடைபெறும் என்பது குறித்தும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார்.

ஓய்கிறது குழப்பம்; கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி... தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு!

தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் முடிவடையும்.

New Delhi:

நாடாளுமன்ற  கூட்டத்தொடர் முடிந்த பிறகே காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். அவரின் முடிவை மாற்ற காங்கிரஸ் தலைவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரது முடிவை மாற்றமுடியவில்லை. 

தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா : நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் அதில் கவனம் செலுத்தி வருகிறோம். மக்கள் பிரச்னைகள் குறித்து பேச வேண்டியது உள்ளது.

கட்சி எம்.பிக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் கூட்டத் தொடரில்  கவனம் செலுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகே காரியக் கமிட்டியை கூட்ட வாய்ப்புள்ளது என்றும் எந்த நாளில் நடைபெறும் என்பது குறித்தும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார். 

தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் முடிவடையும். 

.