This Article is From Sep 10, 2019

ஒரு வருடமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்: சின்மயானந்த் மீது மாணவி பரபரப்பு புகார்!

பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி கல்லூரி மாணவி ஒருவர் ஒரு வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி கல்லூரி மாணவி மாயமானார்.

சின்மயானந்த் ஷாஜஹான்பூர் பகுதியில், ஒரு ஆசிரமம் மற்றும் 5 கல்லுாரிகளை நடத்தி வருகிறார்.

New Delhi:

பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு அளித்த உ.பி. சட்ட கல்லூரி மாணவி (23), கடந்த ஒரு வாரமாக தனக்கும், குடும்பத்தினர் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அஞ்சி தலைமறைவாக இருந்து வந்தார். 

தொடர்ந்து அந்த பெண், ‘சின்மயானந்த் தன்னை கற்பழித்ததாகவும், ஒரு வருடமாக தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்' தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் உள்ள லோதி சாலை காவல் நிலையத்தில் அந்த பெண் சமர்பித்த 12 பக்க புகாரில், தனக்கு உத்தரப்பிரதேச காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரது குடும்பத்திற்கு ஷாஜகான்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, சின்மயானந்த் என்னை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தினார். அதன்பிறகும் கூட ஒருவருடமாக தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனிடையே, ஊடகத்திற்கு மத்தியில் தனது அடையாளத்தை பாதுகாக்க முகம் முழுவதையும் ஒரு கருப்பு துணியால் மறைத்து பேசினார். 

இதனிடையே நேற்றைய தினம் திறப்பு புலனாய்வுக் குழு என்னிடம் பல மணி நேரம் விசாரத்தனர். அப்போது சின்மயானந்த் குறித்தும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தேன். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

என்னுடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது, அவரை அங்குள்ள போலிஸார் மிரட்டியுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங்கிடம் இருந்தும் மிரட்டல் வந்துள்ளது.

நான் தங்கியிருந்த விடுதி அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. என் அறையை ஊடகங்கள் முன்பு திறக்கவேண்டும். என்னிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னாதக, ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்துக்கு சொந்தமான கல்லூரியில் முதுநிலை சட்டப் படிப்பு படித்து வந்த இளம் பெண் ஒருவர், சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ மூலம் புகாரளித்தார். பின்னர் அந்தப் பெண் திடீரென மாயமானார். இதைத் தொடர்ந்து சுவாமி சின்மயானந்த் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

பாலியல் தொல்லை குறித்து அந்தப் பெண்ணின் தந்தை போலீஸில் புகார் கொடுத்திருந்தார். சின்மயானந்தும் மேலும் சிலரும் தனது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் பகிரங்கமாக புகாரளித்திருந்தார்.

இதையடுத்து, காணாமல் போன இளம்பெண்ணை போலீஸார் ராஜஸ்தானில் இருந்து கடந்த மாதம் கண்டுபிடித்தனர். 

With input from ANI

.