This Article is From Dec 29, 2018

இந்திய படைவீரர்க்கு சீன வீரர் கற்றுக்கொடுத்தது என்ன!

இந்த தாய்ச்சீ என்னும் உடற்பயிற்சி உடலுக்கான நெகிழ்வு தன்மையை கொடுக்கும்.

இந்திய படைவீரர்க்கு சீன வீரர் கற்றுக்கொடுத்தது என்ன!

சீன படைவீரர் ஓருவர் இந்திய படைவீரர் ஓருவருக்கு அவர்கள் நாட்டில் மிகவும் பிரபலமான உடற்பயிற்சியான தாய் ச்சீ யை கற்று கொடுத்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

New Delhi:

கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த தோக்கால்ம் பிரச்னைக்கு பிறகு இரு நாடுகளுகிடையே கருத்து ஒற்றுமை கிடையாது. இப்படி இருநாடுகளும் வேற்றுமை காட்டிவரும் நிலையில்,சீன படைவீரர் ஒருவர் இந்திய படைவீரர் ஒருவருக்கு அவர்கள் நாட்டில் மிகவும் பிரபலமான உடற்பயிற்சியான தாய்ச்சீயை கற்றுகொடுத்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

இந்த தாய்ச்சீ என்னும் உடற்பயிற்சி உடலுக்கான நெகிழ்வு தன்மையை கொடுக்கும். இதன் மூலம் ஒருவர் தனது உடலின் வலிமையை அதிகரித்து கட்டுபாட்டில் வைக்க உதவும். இணையத்தில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோ காட்சியில் இருவரும் மிக ஆர்வமாக தாய்ச்சீ பயிற்சி செய்வதை பார்க்க முடியும்.

.