டிசம்பரில் இந்திய – சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி நடத்துகின்றன

கடந்த ஆண்டு டோக்லாம் பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ கூட்டுப் பயிற்சி நடைபெறவில்லை

 Share
EMAIL
PRINT
COMMENTS
டிசம்பரில் இந்திய – சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி நடத்துகின்றன

ஆண்டுதோறும் இந்தியா – சீனா ராணுவ கூட்டுப் பயிற்சி நடைபெறும்


New Delhi: 

இந்தியாவும், சீனாவும் ஆண்டு தோறும் ராணுவ கூட்டுப் பயிற்சியை நடத்தி வருகின்றன. ‘ஹேண்டு இன் ஹேண்டு' என்ற பெயரில் இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

கடந்த முறை 2016-ல் மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் வைத்து கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டது. 2017-ம் ஆண்டின்போது இந்தியா மற்றும் சீனா இடையே டோக்லாம் பிரச்னை பெரிதாக வெடித்ததால் இந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டது. டோக்லாம் பிரச்னை சுமார் 73 நாட்களாக நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லையில் அமைந்திருக்கும் டோக்லாம் பகுதியை பூடான் உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. இங்கு சீனா அத்துமீறியதால் பதற்றம் உண்டானது.

டோக்லாம் நிகழ்வுக்குப் பின்னர் சீனா – இந்தியா உறவுகள் மீண்டும் வலுப்பெற தொடங்கியது. இந்த நிலையில் வரும் டிசம்பரில் இந்தியா – சீனா கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................