எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா மீண்டும் பேச்சுவார்த்தை

இருதரப்பு உறவுகள் குறித்தும், எல்லை பிரச்னைகளை எப்படி சுமுகமாக தீர்ப்பது என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது

எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா மீண்டும் பேச்சுவார்த்தை

இந்திய பகுதிகள் சிலவற்றை சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

Beijing:

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை தொடர்பாக அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

சீனாவின் தரப்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யி தலைமையில் சீன பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேதிகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் உறுதி செய்யப்படவில்லை. பீஜிங் நகருக்கு வெளியே இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - சீனா இடையே 3,488 கிலோ மீட்டர் நீளத்திற்கு நில எல்லை செல்கிறது. இதில், அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளும், தெற்கு திபெத்தும் தனக்கு சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

இதுவரைக்கும் எல்லை பிரச்னை தொடர்பாக 20 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Listen to the latest songs, only on JioSaavn.com