3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அண்மையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் 3,501 நகரும் நியாய விலை கடைகளை முதல்வர் பழனிசாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காமராஜ், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ மற்றும் அதிகாரிக்ள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.