
தனது உருவப்படம் பொறிக்கப்பட்ட தங்க ஜரிகைப் பட்டை வியந்து பார்க்கும் சீன அதிபர்.
தமிழகத்தில் 2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்ட சீன அதிபரி ஜி ஜிங்பிங்கிற்கு பிரதமர் மோடி கோவையில் தயாரிக்கப்பட்ட தங்க ஜரிகைப் பட்டை பரிசாக அளித்தார். அதில் தனது உருவப்படம் தத்ரூபமாக பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து சீன அதிபர் ஜிங்பிங் வியந்து போனார்.
சீனாவின் பாரம்பரிய நிறமாக கருதப்படும் சிவப்பு வண்ணத்தில் பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தங்க ஜரிகைகள் சேர்க்கப்பட்டு சீன அதிபரின் உருவப்படம் மிக அழகாக நெய்யப்பட்டுள்ளது.
இந்தப் பட்டு ஸ்ரீராமலிங்கா சவுதாம்பிகை கூட்டுறவு சங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. சீன மக்கள் சிவப்பு வண்ணத்தை அதிகம் விரும்புகின்றனர். அது, அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, உற்சாகத்தை பிரதிபலிக்கும் நிறம் என்பது சீன மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
The hand-woven silk portrait of Chinese President Xi Jinping gifted by PM Narendra Modi, was created by weavers of Sri Ramalinga Sowdambigai Handloom Weavers Co-operative Society in Sirumugaipudur in Coimbatore District. #TamilNadupic.twitter.com/8E3VRPiUsO
— ANI (@ANI) October 12, 2019
பட்டுத் துணிகளின் தாயகமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இங்கு காஞ்சிபுரம், ஆரணி, மதுரை, கோவை, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் நெய்யப்படும் பட்டுத்துணிகள் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
முன்னதாக மோடி தங்கியிருந்த கோவளம் தாஜ் ஓட்டலில் கைவினைப் பொருட்கள் சீன அதிபருக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை மோடி விளக்க ஜிங்பிங் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்.