நடிகை பானுப்ரியா வீட்டில் இருந்து 3 சிறுமிகள் மீட்கப்பட்டதாக தகவல்

சிறுமி ஒருவரின் தாயார் ஆந்திர போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமிகள் 3 பேரை மீட்டுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நடிகை பானுப்ரியா வீட்டில் இருந்து 3 சிறுமிகள் மீட்கப்பட்டதாக தகவல்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை பானுப்ரியா


Chennai/Samalkot: 

ஹைலைட்ஸ்

  1. 3 சிறுமிகள் நடிகை பானுப்ரியாவில் மீட்கப்பட்டதாக தகவல்
  2. பானுப்ரியா மீது ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்
  3. தன் மீதான குற்றச்சாட்டுகளை பானுப்ரியா மறுத்திருக்கிறார்

நடிகை பானுப்ரியாவின் சென்னை வீட்டில் இருந்து 3 சிறுமிகள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமி ஒருவரின் தாயார் ஆந்திர காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

தியாகராய நகரில் உள்ள பானுப்ரியா வீட்டில் குழந்தைகள் நல அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்ருந்த 3 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து குழந்தைகள் நல ஆர்வலர் அச்சியுதா ராவ் தேசிய குழந்தைகள் நல ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். 

நடிகை பானுப்ரியா வீட்டில் 4 சிறுமிகள் பணிக்கு இருந்ததாக அச்சியுதா ராவுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை விசாரிக்க கோரி குழந்தைகள் நல ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். 

இதுகுறித்து என்.டி.டி.வி.க்கு அச்சியுதா ராவ் அளித்திருக்கும் பேட்டியில், ''பானுப்ரியாவும், அவரது தாயாரும் விதிகளை மீறி சிறுமிகளை பணிக்கு அமர்த்தியுள்ளனர். சிறுமிகளை கடத்தி வந்து பானுப்ரியா வீட்டில் சேர்த்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தால் மேலும் பல சிறுமிகள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது'' என்று கூறினார். 

முன்னதாக இந்த புகாரை நடிகை பானுப்ரியா மறுத்திருந்தார். தனது வீட்டில் பணி புரிந்தவர்கள் சிறுமிகள் அல்ல என்றும் அவர்களுக்கு 18 வயது ஆகி விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக பானுப்பிரியாவின் சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................