This Article is From Oct 18, 2018

சமூக வலை தளங்களில் குழந்தைகள் விற்பனை – போலீசார் எச்சரிக்கை

குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து அதன் மூலம் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைதாகி உள்ளனர்

சமூக வலை தளங்களில் குழந்தைகள் விற்பனை – போலீசார் எச்சரிக்கை

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சகிக்க மாட்டோம் என இன்ஸடாக்ராம் கூறியுள்ளது.

KUALA LUMPUR:

இன்ஸ்டாக்ராம் சமூக வலைதளத்தின் வழியாக குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்து அதனை இந்தோனேசிய போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சுரபயா நகரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதள நிறுவனங்கள் தங்களது தளத்தில் என்ன பகிரப்படுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், அதிகாரிகளுடன் நல்ல முறையில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

ஆன்லைனில் குழந்தைகள் கடத்தலை தடுத்து நிறுத்தியது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களை பயன்படுத்தி பாலியல் தொழிலாளர்கள் தங்களது தொழிலை செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்தோனேசியாவில் இன்ஸ்டாக்ராம் உதவியின் மூலம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டன. சமூக வலை தளங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட குழந்தைகள் விற்பனை இன்ஸ்டாகிராம் அக்கவுன்டை 700 பேர் ஃபாலோ செய்துள்ளனர். குறிப்பாக முறையற்ற வகையில், திருமணம் செய்து கொள்ளாமல் பிறந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது என்று தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு நாங்கள் என்றுமே எதிரானவர்கள். குழந்தைகள் விற்பனை செய்வதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் 13 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். சுமார் 6 கோடி பேருக்கு இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் உள்ளது. இங்கு மொத்த மக்கள் தொகை 26 கோடி.

இந்தோனேசியாவில் பாலியல் தொழில் மூலமாக ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் குழந்தைகள் பிறக்க வைக்கப்பட்டு அந்த குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக ஐ.நா. வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.