This Article is From Jun 11, 2018

டெக் நிறுவனங்களை முறைப்படுத்த வரப் போகிறது புதிய சட்டம்… பிரைவசி பாதுகாக்கப்படுமா!?

ஃபேஸ்புக், கூகுள், அமேசான் போன்ற டெக் நிறுவனங்கள் அதனை பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரே சொடக்கில் பல தனிப்பட்ட தகவல்களை பெற்றுவிடுகின்றன

டெக் நிறுவனங்களை முறைப்படுத்த வரப் போகிறது புதிய சட்டம்… பிரைவசி பாதுகாக்கப்படுமா!?

பி.என்.ஸ்ரீகிருஷ்ணா

ஹைலைட்ஸ்

  • பிரைவசி தகவல்களை பாதுகாக்க புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது
  • இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கொடுக்கப்படும்
  • முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎன்.ஸ்ரீகிருஷ்ணா,மசோதாவை தயாரித்துள்ளார்

ஃபேஸ்புக், கூகுள், அமேசான் போன்ற டெக் நிறுவனங்கள் அதனை பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரே சொடக்கில் பல தனிப்பட்ட தகவல்களை பெற்றுவிடுகின்றன. இப்படி தகவல் பெறுவதை முறைப்படுத்த இந்தியாவில் இதுவரை முறையான சட்டம் இல்லாத நிலையில், முதன் முறையாக ஒரு மசோதா சீக்கிரமே நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. அந்த மசோதா, சட்டமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இந்த மசோதாவைத் தயாரிக்கும் பணியை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான பி.என்.ஸ்ரீகிருஷ்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர் இதற்காக 10 பேர் குழுவுடன் இணைந்து பல நாட்கள் வேலை செய்து, மசோதாவின் கடைசி திருத்தும் பணிகளை செய்து வருகிறார். 

mark zuckerberg

சமீப காலமாக சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் ஃபேஸ்புக் தகவல் கசிவு காரணமாக தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் தகவலை பறிமாறிக் கொண்டது உலக அளவில் ஃபேஸ்புக்கின் நம்பகத்தன்மையின் மீதும் சமூக வலைதளங்களின் நம்பகத்தன்மையின் மீதும் கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு பக்கம் இப்படி தொடர்ந்து பொது மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சாதரணமாக கசிந்து வரும் நிலையில், மறு பக்கம் ஒரே சொடக்கில் போனில் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்வதை ஏறக்குறைய அனைத்து டெக் நிறுவனங்களும் செய்து வருகின்றன. இந்நிலையில் தான், பி.என்.ஸ்ரீகிருஷ்ணா வரையறுத்துக் கொடுக்கப் போகும் மசோதாவானது பல டெக் நிறுவனங்களுக்கு கிலி கொடுத்து வருகின்றது.

 
data privacy bloomberg

இந்த விஷயம் குறித்து பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, `இந்தியா ஒரு சிலிகான்-சிப் பொருளாதாரமாக மாறி வருகிறது. ஆனால், பிரைவசி குறித்து டேட்டா முறைப்படுத்துதல் குறித்தும் நமக்கு தெளிவு இல்லை. அது சார்ந்த சட்டங்களும் மிகவும் பின்தங்கியுள்ளது. சர்க்கரை அளவையும் ரத்தக் கொதிப்பையும் நாம் எப்படி கட்டுக்குள் வைத்திருக்கிறோமோ, அதேபோல டேட்டாவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. புதிதாக வரப் போகும் மசோதா குறித்து அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபிலிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் கண்டிப்பாக அச்சத்தில் தான் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

amazon bloomberg

இந்தியாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.5 கோடி தான். ஆனால், 2017 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 37 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல நாளுக்கு நாள் இணையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனால், டெக் நிறுவனங்களுக்கு உலகிலேயே மிகப் பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. எனவே டேட்டா என்று சொல்லப்படும் தரவுகளுக்கு சில முறைப்படுத்தும் நடைமுறை இருக்க வேண்டும் என்று தெரிகிறது. பி.என்.ஸ்ரீகிருஷ்ணா மசோதாவைத் தான் அரசிடம் தரப் போகிறார். அதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பதை தற்போதைக்கு கணிக்க முடியாது. 

computer generic

 

.