This Article is From May 17, 2019

கோட்சேயுடன் ராஜீவ் காந்தியை ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய மற்றொரு பாஜக எம்.பி!

கோட்சே ஒருவரை கொன்றார், கசாப் 72 பேரை கொன்றார், ராஜீவ் காந்தி 17,000 பேரை கொன்றார். இதில் யார் அதிக கொடூரமானவர் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என பாஜக எம்.பி., நளின் குமார் காடீல் கூறியுள்ளார்.

கோட்சேயுடன் ராஜீவ் காந்தியை ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய மற்றொரு பாஜக எம்.பி!

நாதுராம் கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக எம்.பி நளின் குமார் காடீல்

Bengaluru/New Delhi:

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே குறித்து பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூரின் சர்ச்சை கருத்தை தொடர்ந்து, கர்நாடகா பாஜக எம்.பி நளின் குமார் காடீல் மற்றொரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த வாரம் பரப்புரையில் ஈடுபட்ட போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பலரும் கண்டனங்களும், ஆதரவுகளும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்துக்கு பதில் தெரிவித்தார்.

அதில், நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார். அவரை தீவிரவாதி என்று அழைப்பவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. கோட்சே பற்றிய பிரக்யா சிங்கின் கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடில்லை என்றும் இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைமை கூறியது.

பாஜக சார்பில் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தம்முடைய கருத்துக்கு பிரக்யா சிங் மன்னிப்பு கோரினார். மேலும், பாஜகவின் உண்மையான சேவகி நான், கட்சி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே என்னுடைய நிலைப்பாடு.
 

fmlqigoo

யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அப்படி யாரையேனும் எனது காயப்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாட்டிற்காக காந்தி செய்த எதையும் மறக்க முடியாது. எனது கருத்துக்கள் ஊடகங்களால் திரித்து கூறப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இந்நிலையில், இதுகுறித்து கர்நாடகா பாஜக எம்.பி., நளின் குமார் காடீல் தனது ட்விட்டர் பதிவில் கூறும்போது,

கோட்சே ஒருவரை கொன்றார், கசாப் 72 பேரை கொன்றார், ராஜீவ் காந்தி 17,000 பேரை கொன்றார். இதில் யார் அதிக கொடூரமானவர் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என பாஜக எம்.பி., நளின் குமார் காடீல் கூறியுள்ளார்

2012ல் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப்புடன் ராஜீவ் காந்தி பெயரை சேர்த்து குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காடீல், இந்த முறை தாக்ஷினாவில் இருந்து போட்டியிடுகிறார்.

பாஜகவின் கண்டனத்தை தொடர்ந்து, பிரக்யா தாகூர் மன்னிப்பு கூறிய நிலையில், அவரைத்தொடர்ந்து தற்போது நளின் குமார் காடீலும் அந்த வரிசையில் மன்னிப்பு கேட்க உள்ளார்.

.