This Article is From Feb 06, 2020

“காந்திஜி உங்களுக்கு வெறும் டிரெய்லர்… ஆனால், எங்களுக்கு…”- நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி, “காந்திஜி உங்களுக்கு வெறும் டிரெய்லராக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அவர் வாழ்க்கை,” என்றார். 

“காந்திஜி உங்களுக்கு வெறும் டிரெய்லர்… ஆனால், எங்களுக்கு…”- நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

“காந்தியால் முன்னின்று நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு டிராமா"

New Delhi:

பாஜக எம்பி, அனந்த்குமார் ஹெக்டே, மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிர்க்கட்சி எம்பி-க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். 

பிரதமர் மோடி பேசுவதற்கு முன்னதாக காங்கிரஸ் எம்பி, அதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜகவுக்கு எதிராக எழுப்பப்பட்ட கோஷங்களை சுட்டிக்காட்டி, “இது வெறும் டிரெய்லர்தான்” என்றார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி, “காந்திஜி உங்களுக்கு வெறும் டிரெய்லராக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அவர் வாழ்க்கை,” என்றார். 

இந்த வாரத் தொடக்கத்தில் அனந்த்குமார் ஹெக்டே, “காந்தியால் முன்னின்று நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு டிராமா. இது குறித்து வரலாற்றுப் புத்தகங்களில் நான் படித்தபோது எனது ரத்தம் கொதித்தது. மொத்த சுதந்திரப் போராட்டமும், பிரிட்டிஷின் ஆதரவோடும் சம்மதத்தோடும் நடத்தப்பட்டது,” என்று பேசியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

ஹெக்டேவின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து பாஜக, அவரின் பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தியது. மேலும் அக்கட்சி, ‘ஹெக்டே சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை,' என்று பின்வாங்கியது. 


 

.