This Article is From Feb 25, 2020

காந்தியை மறந்து, மோடியைப் புகழ்ந்த டிரம்ப்! - சர்ச்சை கிளப்பும் காங்கிரஸ்!

சபர்மதி ஆசிரமத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்புக்கு சுற்றிக் காட்டினார்.

காந்தியை மறந்து, மோடியைப் புகழ்ந்த டிரம்ப்! - சர்ச்சை கிளப்பும் காங்கிரஸ்!

சபர்மதி ஆசிரமத்தை டிரம்புக்கு சுற்றி காட்டிய பிரதமர் மோடி

Ahmedabad:

அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆசிரமத்தில் உள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் சுதந்திரப் போராட்ட தியாகியான மகாத்மா காந்தி குறித்து எதுவும் குறிப்பிடாமல், பிரதமர் மோடி குறித்து எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்முறையாக இந்தியா வருகை தந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட்டனர். அப்போது, அவர்கள் இருவரும் மகாத்மா காந்தியின் ராட்டையைச்  சுற்றிப் பார்த்தனர். தொடர்ந்து, அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டி, விளக்கம் அளித்தார். 

 

fjaca05

சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த டிரம்ப். 

தொடர்ந்து, டிரம்பும், மெலனியா டிரம்பும் மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, சபர்மதி ஆசிரமத்தில் உள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில், எழுதிய டிரம்ப் மகாத்மா காந்தி குறித்து எதுவும் குறிப்பிடாமல், அதற்குப் பதிலாக "தனது சிறந்த நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு" இப்படி, அற்புதமான பயணத்தை வழங்கியதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த குறிப்பை அவரது முன்னோடியான ஒபாமா 2010ல் இந்தியா வந்தபோது, சபர்மதி ஆசிரமத்தில் எழுதிய குறிப்புடன் ஒப்பிட்ட பலர் முரண்பட்ட கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். 

la5g3ilk

சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையைச் சுற்றிப் பார்த்த டிரம்ப். 

அந்தவகையில், இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தனது ட்வீட்டர் பதிவில், ஒபாமாவைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அப்போது, ஒபாமா எழுதியதாவது, "காந்தியின் வாழ்க்கைக்கான இந்த சாட்சியத்தைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால், நம்பிக்கையும் உத்வேகமும் நிறைந்திருக்கிறேன். அவர் இந்தியாவுக்கு மட்டுமல்ல ஹீரோ அல்ல, ஆனால் உலகிற்கே ஹீரோ என்று ஒபாமா குறிப்பிட்டிருந்தார். 

(With inputs from agencies)

.