பாலியல் குற்றச்சாட்டு: பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்திடம் 7 மணி நேரம் விசாரணை!

உத்தர பிரேதச போலீசார் சின்மயானந்தை சுமார் 7 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர். இது சக்திவாய்ந்த அரசியல்வாதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது அவரைக் கேள்வி கேட்கவோ தயங்குவதைப் பற்றிய கேள்விகளை முன்வைத்துள்ளது.

சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகார் குறித்து சின்மயானந்திடன் விசாரணை நடைபெற்றது.

Shahjahanpur:

பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சின்மயானந்திடம் நேற்று இரவு விசாரணை நடந்துள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சரான சின்மயானந்திடம் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. 

வாஜ்பாய் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவர் சின்மயானந்த். 73 வயதான இவர் பல ஆசிரமங்களையும் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பாலியல் புகார் குறித்து இன்னும் அவர் மீது காவல்துறையின் வழக்குப்பதிவு செய்யவில்லை. 

சின்மயானந்தின் விசாரணை நேற்று மாலை 6:20 மணிக்கு தொடங்கி அதிகாலை 1 மணி வரை சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நடத்தும் ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவரின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சின்மயானந்தின் வழக்கறிஞர் கூறும்போது, "நாங்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம், நாங்கள் மீண்டும் ஆஜராக வேண்டியிருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்துக்கு சொந்தமான கல்லூரியில் முதுநிலை சட்டப் படிப்பு படித்து வந்த இளம் பெண் ஒருவர், சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ மூலம் புகாரளித்தார். பின்னர் அந்தப் பெண் திடீரென மாயமானார். 

பாலியல் தொல்லை குறித்து அந்தப் பெண்ணின் தந்தை போலீஸில் புகார் கொடுத்திருந்தார். சின்மயானந்தும் மேலும் சிலரும் தனது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் பகிரங்கமாக புகாரளித்திருந்தார். 

இதுகுறித்து அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறும்போது, சின்மயானந்த் என்னை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தினார். அதன்பிறகும் கூட ஒருவருடமாக தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். சிறப்பு புலனாய்வுக் குழு என்னிடம் பல மணி நேரம் விசாரித்தனர். அப்போது சின்மயானந்த் குறித்தும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தேன். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

என்னுடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது, அவரை அங்குள்ள போலீஸார் மிரட்டியுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங்கிடம் இருந்தும் மிரட்டல் வந்துள்ளது.

நான் தங்கியிருந்த விடுதி அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. என் அறையை ஊடகங்கள் முன்பு திறக்கவேண்டும். என்னிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவேன் என்று அவர் கூறினார்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறும்போது, 'சின்மயானந்தை நாங்கள் விசாரிக்க மாட்டோம் என்று கூறுவது தவறானது'. விசாரணைக்கு ஆஜராகும்படி, மூன்று நாட்கள் முன்னதாகவே நாங்கள் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். எனினும், அவரது உடல்நிலை சரி இல்லை என தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறும்போது, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் அந்த பெண் குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறியதாகக் கூறப்படுகிறது, இது அவரை சுமார் 15 மணி நேரம் விசாரித்து, அந்த பெண் கொடுத்த வீடியோக்களை விசாரணைக் குழு பார்த்துள்ளது.

வாட்ஸ் ஆப்பில் வைரலாக இருக்கும் வீடியோக்களை நாங்கள் அறிவோம், மேலும் சின்மயானந்த் மீதான சிறுமியின் புகாரையும் நாங்கள் அறிவோம். நாங்கள் நிச்சயமாக அவரிடம் கேள்வி எழுப்புவோம், மேலும், தேவையான மற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com