This Article is From Aug 14, 2019

பிகில் படக்குழுவினர் 400 பேருக்கு மோதிரம் கொடுத்து அசத்திய விஜய்!

தினமும் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்

பிகில் படக்குழுவினர் 400 பேருக்கு மோதிரம் கொடுத்து அசத்திய விஜய்!

ஹைலைட்ஸ்

  • நேற்றுடன் பிகில் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது
  • பிகில் படத்தில் தினமும் 400க்கும் மேற்பட்டோர் பனியாற்றியுள்ளனர்
  • இப்படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற உள்ளது

Bigil Shooting Update: விறுவிறுப்பாக சென்னையை ஒட்டி நடைபெற்று வந்த 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று நிறைவுற்றது. இதனை கொண்டாடும் விதமாக படத்தில் பணியாற்றிய பணியார்கள் 400 பேருக்கு விஜய் பிகில் என்கிற பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் பரிசலித்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தெறி (Theri), மெர்சல் (Mersal) படங்களைத் தொடர்ந்து விஜய், அட்லி (Atlee) மூன்றாவது முறை கூட்டணி அமைத்திருக்கும் படம் ‘பிகில்' (Bigil). சென்னை சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 95 சதவீதம் முடிந்துவிட்டன.

இப்படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் நேற்றோடு முடிவடைந்துள்ளன என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். அதற்கான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
 


இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘பிகில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. 95% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது. படம் குறித்த அப்டேட்டுகளை அறிவிக்காததற்கு மன்னியுங்கள். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்து செய்ய முயற்சி செய்து வருகிறோம்' என்று கூறியுள்ளார் மேலும் பிகில் படத்தில் தினமும் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் தளபதி விஜய் (Thalapathy Vijay). அவருடைய மனது தங்கம் போன்றது. தளபதி தான் பெஸ்ட் என்றும் கூறியுள்ளார்.
 


சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே (Singappenney) பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடித்துள்ளார். இவர்களுடன் கதிர் (Kathir), இந்துஜா (Induja), யோகி பாபு (Yogi Babu), விவேக் (Vivek), ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) இசையமைக்கிறார்.

.