This Article is From Mar 14, 2020

டெல்லி, ஆக்ராவுக்கு விசிட் அடித்த கொரோனா பாதிக்கப்பட்டவரின் மனைவி!! திடுக்கிடும் தகவல்

ஹனிமூனை இத்தாலியில் கொண்டாடிவிட்டு திரும்பிய கணவன் - மனைவியில், கணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, ஆக்ராவுக்கு சென்ற 25 வயது மனைவி ஆக்ராவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

டெல்லி, ஆக்ராவுக்கு விசிட் அடித்த கொரோனா பாதிக்கப்பட்டவரின் மனைவி!! திடுக்கிடும் தகவல்

டெல்லி, ஆக்ராவில் கொரோனா பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் நிலைமை விபரீதமாகி விடும்
  • விமானம், ரயிலில் பயணித்த பெண் ஆக்ராவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்
  • கொரோனா தொற்று நோய் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் உண்டாகியுள்ளது
Agra/New Delhi:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் மனைவி, கட்டாய மருத்துவ முகாமிலிருந்து (Quarantine) தப்பிச் சென்று, டெல்லி மற்றும் ஆக்ராவுக்கு பயணம் சென்றுள்ளார். ரயில்வே போலீசாரின் உதவியுடன் ஆக்ரா ரயில்வே காலனியில் வைத்து அதிகாரிகள் அவரை பிடித்துள்ளனர்.

இதையடுத்து அந்தப் பெண் ஆக்ரா சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். 

25 வயதாகும் அவரிடமிருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இத்தாலிக்கு ஹனிமூன் கொண்டாட சென்றுள்ளனர். அந்த நாடு கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவைகளில் ஒன்று.

இந்த நிலையில், இந்தியா திரும்பியதும், கணவரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூருவில் கட்டாய மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேபோன்று 25 வயதாகும் அவரது மனைவியும் கட்டாய மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், அவர் சில தினங்களுக்கு முன்பு தப்பிச் சென்றுவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டாய மருத்துவ முகாமிலிருந்து தப்பிச் சென்ற அவர், பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கும், அங்கிருந்து ரயில் மூலம் ஆக்ராவுக்கும் சென்றுள்ளார். ஆக்ராவில் அவரது பெற்றோர் இல்லம் உள்ளது. அங்கு ஹோலி கொண்டாடுவதற்காக அவர் சென்றிருக்கிறார்.

இதற்கிடையே, அந்தப் பெண் தப்பிச் சென்ற தகவல் அறிந்த அதிகாரிகள், உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவரையும் பிடித்தனர்.

தற்போது அவர் ஆக்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டால் நிலைமை இன்னும் அசம்பாவிதமாகி விடும். 

ஆக்ராவில் உள்ள பெற்றோர் இல்லத்துக்கு சென்றிருப்பதால், அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரியையும் 14 நாட்கள் கட்டாய மருத்துவ முகாமுக்கு செல்லும்படி ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவரது குடும்பத்தை சேர்ந்த மற்ற 8 பேரும் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அச்சத்தின் காரணமாக அந்தப்பெண் தப்பிச் சென்றார் என்று கூறப்படுகிறது.
 

jhhocim

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்

உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, கொரோன வைரஸ் தும்மினாலோ, இருமினாலோ ஒருவரிடமிருந்துமற்றொருவருக்கு பரவும்.

இந்தியாவில் 80 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். வியாழன் அன்று கர்நாடகாவில் 76 வயது முதியவரும், வெள்ளியன்று டெல்லியில் 68 வயது பாட்டியும் கொரோனா தாக்குதலுக்கு பலியானார்கள். 
 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டியுள்ளது. 1.30 லட்சம்பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சார்க் நாடுகள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். 

சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நோபளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு இந்தியாவின் நில எல்லைகளை மூடியுள்ளது. தூதரக, வேலை வாய்ப்பு விசாக்களை தவிர்த்து மற்ற விசாக்களுக்கு ஏப்ரல் 15 வரையில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பெங்களூருரில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. 

சீனாவின் வுஹான் நகரின் மார்க்கெட்டில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்கச் செய்து வருகிறது.
 

.