மருத்துவர்கள் போராட்டம்: அரசு மருத்துவமனை சேவை முற்றிலும் பாதிப்பு!

Bengal Doctors Protest: அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல் செயல்படும், எனினும், மருத்துவர்களின் வருகை குறைவால், அந்த சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

சக ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்


Kolkata: 

மேற்குவங்கத்தில், அரசு மருத்துவமனை ஜூனியர் மருத்தவர்கள் நடத்தும் போராட்டத்தில் சீனியர் மருத்துவர்களும் கலந்து கொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் உள்ள மொத்த அரசு மருத்துவமனை சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர் ஒருவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்க ஜூனியர் மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில், இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டிருக்கும், அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கும் போல், திறந்திருக்கும், எனினும், மருத்துவர்களின் வருகை குறைவால், அந்த சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக பல தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தனியார் மருத்துவமனை சேவைகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த திங்கள் அன்று இரவு கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் அந்த மருத்துவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து, மருத்துவர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கவும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மாநில அரசு உத்தரவாதம் அளித்தபோதிலும், மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................