This Article is From Jul 04, 2020

கொல்கத்தாவிலிருந்து சென்னை உள்பட 6 நகரங்களுக்கு விமான சேவை நிறுத்தம்!

மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு வெளி மாநிலங்களில் இருந்து விமானங்கள் வருவதே  முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

நாட்டில் கடந்த மே 25-ம்தேதி உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.

Kolkata:

கொல்கத்தாவில் இருந்து சென்னை உள்பட 6 நகரங்களுக்கு விமான சேவை வரும் 19ம் தேதி வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், அகமதாபாத் ஆகிய 6 நகரங்களுக்கு கொல்கத்தாவில் இருந்து விமானங்கள் ஏதும் வராது கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.  

முன்னதாக விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று மேற்கு வங்க அரசு தரப்பில் இருந்து மத்திய விமானப்போக்குவரத்து இயக்குனரகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  இதனை  ஏற்ற விமானப் போக்குவரத்து அமைச்சகம், 6 நகரங்களுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு வெளி மாநிலங்களில் இருந்து விமானங்கள் வருவதே  முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

நாட்டில் கடந்த மே 25-ம்தேதி உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச விமான சேவைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் மீட்பு நடவடிக்கையாக சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. 

மத்திய அரசின் தகவல்படி மேற்கு வங்கத்தில் 20,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர்களில் 717 பேர் உயிரிழந்து விட்டார்கள். அதிகபட்சமாக கொல்கத்தாவில்தான் பாதிப்ப காணப்படுகிறது. 

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்.  இங்கு 1.92 லட்சம் பேருக்கு பாதிப்பு உள்ளது. அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.