
இணையப் பதிவர்கள் பலரும் இந்த நிகழ்வை கடுமையாக சாடி வருகின்றனர்.
பாகிஸ்தான் பொருளாதாரத்தை புதுப்பிக்க நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அஜர்பைஜான் தலைநகரான பகுவில் செப்டம்பர் 4 முதல் 8 வரை ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கடைசி நாளான நேற்று மாநாட்டில் பெல்லி நடன கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்த நிகழ்ச்சியை ட்விட்டரில் பலர் பகிர்ந்தனர். உடனடியாக இந்த வீடியோ வைரலானது. இணையப் பதிவர்கள் பலரும் இந்த நிகழ்வை கடுமையாக சாடி வருகின்றனர்.
“தலைமை பொருளாதார நிபுணர் பெல்லி டான்ஸர் மூலம் முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது…” என்று தலைப்பிட்டு பத்திரிகையாளர் இந்த பதிவை வெளியிட்டார்.
அங்கிருந்த நபர் பெல்லி டான்சரின் நடன காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
When General Doctrine Chief Economist tries to lure investors into the Pakistan Investment Promotion Conference in Baku, Azerbaijan with belly dancers.... pic.twitter.com/OUoV85wmnV
— Gul Bukhari (@GulBukhari) September 7, 2019
நெட்டிசன்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பாகிஸ்தானின் நிதிப்பற்றாக்குறை கடந்து முப்பது ஆண்டுகளில் 2018-19 நிதியாண்டில் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஊழல் எதிர்ப்பதாக கூறி ஆட்சியை கைப்பற்றிய இம்ரான் கான் பல சிக்கன நடவடிக்கைகளை செய்தார். பணப்பற்றாக்குறை நாட்டின் பொருளாதார் நிலமையை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.
ஆனால் நிலமையோ தலைகீழாக நடந்தது. பாகிஸ்தானில் எரிவாயு மற்றும் எண்ணெய் பொருட்கள் மற்றும் மின்சாரத்தி விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
மே மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டாலர் கடனளிக்க ஒப்புதல் அளித்தது.