This Article is From May 30, 2020

பைலட்டிற்கு கொரோனா! ரஷ்யா சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் நாடு திரும்பியது

ரஷ்யாவுக்கு சென்று இந்தியர்களை மீட்கவிருந்த விமானம் நடுவானில் டெல்லிக்கு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும் முன்பாக சம்பந்தப்பட்ட குழுவினர் ஏன் விமானத்தை இயக்கினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பைலட்டிற்கு கொரோனா! ரஷ்யா சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் நாடு திரும்பியது

மாஸ்கோவில் இருந்து இந்தியர்களை மீட்டுவர மற்றொரு விமானம் அனுப்பப்பட்டுள்ளது.

New Delhi:

ரஷ்யாவுக்கு சென்று அங்கிருக்கும் இந்தியர்களை மீட்டு வர புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் பைலட்டிற்கு, கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதி வழியில் விமானம் டெல்லிக்கு திரும்பியுள்ளது. நடந்த இந்த தவறு குறித்த விசாரணை நடத்தப்படும் என்று விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை வந்தே பாரத் என்ற நடவடிக்கை மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. இதற்காக விமானம் மற்றும் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இன்று காலை 7 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானத்தை இயக்கிய பயணிக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முடிவு ஏதும் அறிவிக்கப்படவில்லை. 

இந்த சூழலில் பைலட் உள்ளிட்ட குழுவினர், விமானத்தை கிளப்பி, மாஸ்கோ நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

உஸ்பெகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஏர் இந்தியா விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பைலட்டிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதா தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அப்படியே விமானம் டெல்லி நோக்கி திரும்பியது.

மதியம் சரியாக 12.30 மணியளவில் ஏர் இந்தியா விமானம் டெல்லியை அடைந்தது. விமான பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

.