‘ஓர் பாலின ஈர்ப்பு மனநோய் அல்ல!’- கவனம் ஈர்த்த உச்ச நீதிமன்ற கருத்துகள்

ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மிகவும் முக்கியமானது. அதை யாருக்காகவும் அந்த நபர் விட்டுக் கொடுக்க முடியாது, உச்ச நீதிமன்றம்

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘ஓர் பாலின ஈர்ப்பு மனநோய் அல்ல!’- கவனம் ஈர்த்த உச்ச நீதிமன்ற கருத்துகள்
New Delhi: 

ஓர் பாலின ஈர்ப்பு குற்றமல்ல என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. 1861-ம் ஆண்டு இயற்றப்பட்ட, 377 சட்டப் பிரிவு, இயற்கைக்கு முரணான வகையில் பாலினச் சேர்க்கையை குற்றம் என்று கூறுகிறது. இதை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘ஓர் பாலின ஈர்ப்பு குற்றமான செயல் அல்ல’ என்று தீர்ப்பு வந்தது. ஆனால் 2013-ல், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் தான் இந்த விஷயம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றது. ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தான் இன்று தீர்ப்பு வந்துள்ளது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் கவனம் ஈர்த்த கருத்துகள்:

1.அடையாளத்தை பாதுகாப்பது தான் வாழ்வை மேன்மையடயச் செய்யும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. 

2.பிரிவு 377 ஜனநாயகத்துக்கு எதிரானது. எல்ஜிபிடி சமூகத்தில் இருப்பவர்களுக்கும் மற்றவர்களைப் போல அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. பெரும்பான்மையினர் கருத்தும் பொதுவான சிந்தனையும் சட்ட சாசன உரிமைகளைத் தீர்மானிக்காது, தீபக் மிஸ்ரா. 

3.அனைவருக்கும் தனித்துவம் என்பது உண்டு. அந்தத் தனித்துவத்தை சமூகம் இப்போது ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறது. பல விஷயங்களையும் பகுப்பாய்ந்து தான் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கிறோம், தீபக் மிஸ்ரா.

4.ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மிகவும் முக்கியமானது. அதை யாருக்காகவும் அந்த நபர் விட்டுக் கொடுக்க முடியாது, உச்ச நீதிமன்றம்.

5.ஓர் பாலின ஈர்ப்பு மனநோய் அல்ல, உச்ச நீதிமன்றம். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................