This Article is From Jul 31, 2020

“ராஜஸ்தானில் குதிரை பேரத்தின் விலை அதிகரித்துள்ளது”; ராஜஸ்தான் முதல்வர்

200 எம்எல்ஏக்கள் உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரஸ் இதற்கு தயாராக உள்ளதாக தெரிகின்றது.

“ராஜஸ்தானில் குதிரை பேரத்தின் விலை அதிகரித்துள்ளது”; ராஜஸ்தான் முதல்வர்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை குறிவைத்து, பாஜகவின் நிகழ்வில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் செயல்பட்டதாக கெஹ்லோட் குற்றம் சாட்டினார்.

Jaipur:

சமீபக் காலங்களாக ராஜஸ்தான் அரசியல் சூழலில் ஏற்பட்டு வரும் குழப்பங்கள் தற்போது உச்சக்கட்டத்தினை அடைந்துள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என நீண்ட  நாட்களாக ஆளுநருக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் என ஆளுநர் அறிவித்துள்ளார். இந்நிலையில், எம்எல்ஏக்களுக்கான குதிரை பேரம் அதிகரித்துள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

“நேற்றிரவு சட்டசபை அமர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், குதிரை பேரத்தின் விலை அதிகரித்துள்ளது. முதல் தவணை ரூ .10 கோடியாகவும், இரண்டாவது தவணை ரூ .15 கோடியாகவும் இருந்தது. இப்போது அது வரம்பற்றதாகிவிட்டது, யார் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.” என அசோக் கெலாட் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

முன்னதாக சட்டமன்றத்தை கூட்ட மூன்று முறை பரிந்துரைத்தும் ஆளுநர் அதை புறக்கணித்திருந்தார். முதல்வர் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு எதிராக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை குறிவைத்து, பாஜகவின் நிகழ்வில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் செயல்பட்டதாக கெஹ்லோட் குற்றம் சாட்டினார்.

பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் முயன்று வரும் நிலையில் தற்போது அசோக் கெலாட் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைக்க ஆளுநர் தனது அதிகார எல்லைக்கு அப்பால் செயல்படுவதாக கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

200 எம்எல்ஏக்கள் உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரஸ் இதற்கு தயாராக உள்ளதாக தெரிகின்றது.

(With inputs from PTI)

.