This Article is From Jan 08, 2020

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தவறான தகவல்களை தேச விரோதிகள் பரப்புகிறார்கள் :விஜய் கோயல்

சிஏஏ குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் தேச விரோதிகள் என்றும் குறிப்பிட்ட மதம் மற்றும் சமூகத்தின் பெயரில் வன்முறையைத் தூண்டுகிறார்கள்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தவறான தகவல்களை தேச விரோதிகள் பரப்புகிறார்கள் :விஜய் கோயல்

ஆயிஷ் கோஷ் மற்றும் 22 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளது காவல்துறை

New Delhi:

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் “தேச விரோதிகள்” என்று மாநிலங்களவை எம்.பியும் பாஜக மூத்த தலைவருமான விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சதர் பஜாரில் உள்ள பாரதுதி சவுக்கிலிருந்து ஜமா மஸ்ஜித் வரை நடந்த அமைதி அணிவகுப்பிற்கு சென்றபோது இந்த கருத்தினை தெரிவித்தார். மத்திய அமைச்சர் நித்யானத் ராயுடன் அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார்.

சிஏஏ குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் தேச விரோதிகள்  என்றும் குறிப்பிட்ட மதம் மற்றும் சமூகத்தின் பெயரில் வன்முறையைத் தூண்டுகிறார்கள். இது டெல்லிக்கு மட்டுமல்ல மொத்த இந்தியாவிலும் நடக்கிறது. 

எதிர்க்கட்சிகள் நாட்டில் வன்முறையைத் தூண்ட விரும்புகின்றன. ஏனென்றால் மக்கள் அவர்களை ஜனநாயக வழிமுறை மூலம் நிராகரித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பாக முஸ்லீம் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதல் குறித்தும் பேசினார். எதிர்க்கட்சிகள் வன்முறையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டதோடு. இந்த விவகாரத்தில் விசாரணையின் பின் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்று கூறினார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஜாமியாவில் வன்முறையைத் தூண்டின. இப்போது ஜே.என்.யூவில் வன்முறையைத் தூண்டின. ஜே.என்.யூவின் மாணவர் தலைவர் ஆயி கோஷ்,  அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்களால் தாக்கப்பட்டார். அவர் ஜே.என்.யூவில் வன்முறையில் ஈடுபட்டதற்கான வலுவான சான்றுகள் உள்ளன” என்று விஜய் கோயல் தெரிவித்தார்.

.