This Article is From Jun 02, 2019

அமைச்சரவையில் ஒரு சீட் மட்டுமே ஒதுக்கிய பாஜக மீது அதிருப்தி - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பாஜகவின் செயல்பாட்டினால் நிதிஷ் குமார் அதிருப்தியில் உள்ளதாக பாஜக தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அமைச்சரவையில் ஒரு சீட் மட்டுமே ஒதுக்கிய பாஜக மீது அதிருப்தி - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பாஜகவின் சீட் பகிர்வின் போது கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க நிதிஷ்குமார் விருப்பம் தெரிவித்திருந்தார்.

New Delhi:

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தன் கட்சிக்கு ஒரேயொரு இடத்தை மட்டும் மோடி தலைமையிலான அரசு வழங்கியுள்ளது என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடந்தது. அவர் தனது கட்சி உறுப்பினர்கள் 8 பேரினை சேர்த்துள்ள நிலையில் பாஜக ஒரு தொகுதியை மட்டுமே கொடுத்துள்ளது. 

துணை முதலமைச்சர் சுஷில் மோடி நான்கு துறைகளை கைவசம் வைத்துள்ளார். எதிர்காலத்தில் காலியாக உள்ள அமைச்சர் பதவிகள் நிரப்ப வேண்டும் என்று கோரியுள்ளார்.

பாஜகவின் செயல்பாட்டினால் நிதிஷ் குமார் அதிருப்தியில் உள்ளதாக பாஜக தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியில் தலைமையிலான கட்சி 300 இடங்களை தாண்டி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 272 இடங்களே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் சீட் பகிர்வின் போது கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க நிதிஷ்குமார் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் கூட்டணிக் கட்சிகளை குறியீடாக பிரதிநிதித்துவம் படுத்த பேருக்கு ஒரு சீட்டு மட்டுமே வழங்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் பல இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு சீட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

பீகாரைப் பொறுத்தவரையில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் வெறும் பேருக்கு ஒரு சீட் மட்டும் கொடுப்பது சரியல்ல... ஆனாலும் பாஜகவுடனே கூட்டணியில் இருக்கிறோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

.